திருப்பூர்: காலாவதியான குளுக்கோஸ் வழங்கிய விவகாரத்தில் ஆய்வக நிபுணர் நாகஜோதி சஸ்பெண்ட் செய்யபட்டார். மகப்பேறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிக்கு காலாவதியான குளுக்கோஸ் வழங்கிய விவகாரத்தில், மருந்தாளுனர் வீரபராசக்தி, செவிலியர் கோமதி ஆகியோரை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.