விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு சிறந்த மருத்துவ துறை சார்ந்த கல்லூரிக்கான கற்றல் விருது

சேலம்:  சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு, சிறந்த மருத்துவ துறை சார்ந்த கல்லூரிக்கான கற்றல் விருது வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து துறையின் டீன் டாக்டர்.செந்தில்குமார் கூறியதாவது:இந்தியாவில் கல்வியின் மதிப்பையும், அதன் இலக்குகளை மென்மேலும் உயர்த்த உதவும் நோக்கத்தோடு, ஆண்டுதோறும் கல்வியியல் சார்ந்த கணிப்பினை மேற்கொண்டு, அதன் மூலம் சிறந்த கல்வி நிறுவனங்களை அடையாளம் கண்டு கற்றல் விருதுகள் என்ற தலைப்பில் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.  

இவ்வாண்டிற்கான விருது வழங்கும் விழா, சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு, விம்ஸ் அலைடு ெஹல்த் சயின்ஸ் துறைக்கு சிறந்த மருத்துவ துறை சார்ந்த கல்லூரிக்கான விருது வழங்கினார். தொடர்ந்து 2வது முறையாக அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை ெபற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து துறையின் டீன் டாக்டர். செந்தில்குமாருக்கு பல்கலைக்கழக வேந்தர் டாக்டர். கணேசன், இயக்குனர் டாக்டர். அனுராதா கணேசன் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: