மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்

மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து  கடந்த ஜூன் 12ல், காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. நடப்பாண்டில் பெய்த பருவமழை காரணமாக, மேட்டூர் அணை நிரம்பி உபரி நீராக 79.50 டி.எம்.சி. தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12ம் தேதி முதல் நேற்று வரை 129 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நடப்பு நீர்ப்பாசன ஆண்டில், மேட்டூர் அணைக்கு கர்நாடகாவிலிருந்து 167.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு 237 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது. இதனிடையே, நேற்று மாலை 6 மணி முதல் மேட்டூர் அணையிலிருந்து, காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் அணை மின்நிலையம், சுரங்க மின் நிலையம் மற்றும் கதவணைகளில் மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: