அவிநாசியில் 448 பல்டியடித்து சிறுவன் உலக சாதனை

அவிநாசி: அவிநாசி பழங்கரையை சேர்ந்த சிறுவன் சபரீஷ் (8). இவர், 500 மீட்டர் தூரத்தை 10.45 நிமிடத்தில் 448 பல்டியடித்து, கடந்து சென்று புதிய உலக சாதனை படைத்துள்ளார். இவனுக்கு உலக சாதனை புத்தக நிறுவன கண்காணிப்பாளர் விஷ்ணுபைரவன் முன்னிலையில், சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில்,  அவிநாசி தாசில்தார் ராகவி, ஒன்றிய கவுன்சிலர்கள் பிரசாத்குமார், கார்த்தி மற்றும் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவனை வாழ்த்தினர்.

சபரீஷ் கூறுகையில், யோகாவில் புதிய சாதனை படைக்கவேண்டும் என்ற நோக்கில் கடந்து ஒரு வருடமாக தபஸ் யோகாலயா மையத்தில் கலந்து கொண்டு பயிற்சி பெற்று, இந்த சாதனை புரிந்துள்ளேன். இந்த சாதனைக்கு உதவிய யோகா ஆசிரியர்கள் ரகுபாலன், சத்யா ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

Related Stories:

>