×

கிளாமராக நடனம் ஆட மறுப்பு: தமன்னாவின் திடீர் முடிவுக்கு திருமணம் காரணமா?

சென்னை: திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா, தமிழில் சுந்தர்.சி இயக்கிய ‘அரண்மனை 4’ என்ற படத்தில் நடித்திருந்தார். முன்னதாக ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ என்ற படத்தில் ‘காவாலா’ என்ற பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். பிறகு ‘ஸ்ட்ரீ 2’ என்ற படத்தில் ‘ஆஜ் கீ ராத்’ பாடலுக்கு நடனம் ஆடினார். தொடர்ந்து குத்துப் பாடல்களுக்கு நடனம் ஆடுவது போலவே வாய்ப்பு வருவதால், சமீபகாலமாக ஒரு பாடலுக்கு ஆடுவதை தவிர்த்து வருகிறார். இந்தியில் வெளியான ‘துரந்தர்’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘ஷராரத்’ பாடலுக்கு நடனம் ஆட வேண்டும் என்று, முதலில் தமன்னாவை படக்குழுவினர் அணுகினர். இதற்கு அவர் மறுத்துவிட்டதால், பிறகு அந்த வாய்ப்பு ஆயிஷா கானுக்கு சென்றது.

இந்நிலையில், தொடர்ந்து குத்துப்பாடல்களில் ஆடுவதால், தன்னை ஒரு ‘குத்தாட்ட நடிகை’ என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்று தமன்னா பயப் படுகிறார். தற்போது அவர் ஆன்மீகத் தில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளதால், கிளாமர் நடனம் ஆடினால் கடும் விமர்சனத்துக்கு ஆளாகிவிடுவோமோ என்று தயங்குகிறார். இதனால், சமீபகாலமாக கவர்ச்சி நடனம் ஆடுவதை தவிர்த்து வருகிறார். 36 வயதாகும் தமன்னாவுக்கு இந்த ஆண்டில் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இவை அனைத்தையும் மனதில் கொண்டே தமன்னா இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக அவர் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடனான காதல் முறிவின் காரணமாக சில மாதங்கள் வரை சோகத்தில் மூழ்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamannaah ,Chennai ,Sundar ,C. Earlier ,Rajinikanth ,
× RELATED நாய் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்...