×

தமிழ் படத்துக்கு ஏன் பாரபட்சம்? தெலுங்கு பட புரமோஷனில் நயன்தாரா நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு

ஐதராபாத்: சிரஞ்சீவி நடித்துள்ள 157வது படம், ‘மன சங்கர வரபிரசாத் காரு’. இதை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். ஹீரோயின்களாக நயன்தாரா, கேத்ரின் தெரசா நடித்துள்ளனர். வரும் 12ம் தேதி திரைக்கு வரும் இப்படத்துக்கான புரமோஷனில் நயன்தாரா பங்கேற்றார். வழக்கமாக அவர் நடிக்கும் படங்களின் புரோமோஷனில் பங்கேற்பது இல்லை என்பதை பல வருடங்களாக கடைப்பிடித்து வருகிறார். இது தயாரிப்பாளர்கள் மத்தியில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி நடிக்கும் அவர், புரமோஷனில் பங்கேற்காமல் புறக்கணிப்பதை பல்வேறு தரப்பினர் கண்டித்தாலும், தான் தயாரிக்கும் படத்துக்கு மட்டுமே தியேட்டருக்கு சென்று பார்த்து சோஷியல் மீடியாவில் பதிவிடுவார்.

சமீபகாலமாக நயன்தாரா நடித்த எந்த தமிழ் படத்தின் புரமோஷனிலும் பங்கேற்காத அவர், தெலுங்கு படத்தின் புரமோஷனுக்கு சென்றதை பலர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், ‘மன சங்கர வரபிரசாத் காரு’ படக்குழு வெளியிட்டுள்ள வீடியோவில் நயன்தாரா தானாக முன்வந்து, ‘என்ன அனில், படத்துக்கு புரமோஷன் இல்லையா?’ என்று கேட்கிறார். உடனே அனில் ரவிபுடி மயங்கி விழுவது போன்ற ஒரு காட்சி சிரிப்பை வரவழைக்கிறது. தமிழ் படங்களுக்கு பாராமுகமாக இருந்து விட்டு, தெலுங்கு படவுலகிற்கு நயன்தாரா விசுவாசமாக இருப்பது ஏன் என்று, சோஷியல் மீடியாவில் பல ரசிகர்களும், நெட்டிசன்களும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Tags : Nayanthara ,Hyderabad ,Chiranjeevi ,Anil Ravipudi ,Catherine Tresa ,
× RELATED ரசிகர்களுக்கு மும்தாஜ் வேண்டுகோள்