×

சினேகாவின் பிட்னஸ் ரகசியம்

சுந்தர்.சி இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நடிக்கும் சினேகாவுக்கு 44 வயதாகிறது. இப்போதும் அவர் தன்னை அழகாகவும், உடலை ஆரோக்கியத்துடனும் வைத்திருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ‘உடல் ஆரோக்கியம் மற்றும் பிட்னஸிற்கு பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டுள்ளேன். ஒவ்வொரு பயிற்சியும் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு எனக்கு பலன் கொடுக்காது. உடனே வேறொரு பயிற்சிக்கு மாறிவிடுவேன். இப்போது, உடல் எடையை சராசரியாக வைத்திருக்கும் பயிற்சி எனக்கு பலன் அளிக்கிறது.

தினமும் குறைவான கலோரிகளில் உணவு எடுத்துக்கொள்வதில் கவனத்துடன் செயல்படுகிறேன். சர்க்கரையை முற்றிலும் தவிர்த்துவிடுகிறேன். மாதம் ஒருமுறை, எப்போதாவது தோன்றினால் மட்டுமே சர்க்கரை எடுத்துக்கொள்வேன். முடிந்தவரையில் எனது வீட்டில் சமைத்து சாப்பிடுவதே எனக்கு பிடிக்கும். துரித உணவுகளுக்கு ‘நோ’ சொல்லிவிடுவேன். மாதம் ஒருமுறை மட்டுமே எனது குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்கு சென்று சாப்பிடுவேன்’ என்றார்.

Tags : Sneha ,Sundar.C ,
× RELATED ரசிகர்களுக்கு மும்தாஜ் வேண்டுகோள்