×

ரசிகர்களுக்கு மும்தாஜ் வேண்டுகோள்

டி.ராஜேந்தர் இயக்கிய ‘மோனிஷா என் மோனலிசா’ என்ற படத்தில் அறிமுகமானவர், மும்தாஜ். பிறகு ‘மலபார் போலீஸ்’, ‘பட்ஜெட் பத்மநாபன்’, ‘குஷி’, ‘சாக்லெட்’, ‘லண்டன்’ உள்பட பல படங்களில் நடித்தார். வாய்ப்புகள் குறைந்ததால் ‘ஸ்டார்’, ‘ஏய்…’, ‘குத்து’ உள்பட சில படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமாடினார். கடைசியாக 2015ல் ‘டாமி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கினார். தற்போது ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்தும் மும்தாஜ் கூறுகையில், ‘16 வயதில் நடிக்க வந்த நான், தொடர்ந்து பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தேன். சினிமாவில் நடிப்பது என்பது ஒரு தொழில்.

படத்தில் ஒரு கேரக்டராக மாறி நடிப்பதுடன் எனது பணி முடிந்துவிட்டது என்று நினைத்தேன். தற்போது நடிப்பதை நிறுத்தி விட்டேன். ஆனால், நடிப்பு தவிர எனக்கு வேறெதுவும் தெரியாததால், குறிப்பிட்ட ஆடைகளை அணிய மாட்டேன், சில கேரக்டர்களில் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன். அதை சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, நடிப்பதை நிறுத்திவிட்டேன். இப்போது ஒரு சாதாரண பெண்ணாக, எளிய உணவை சாப்பிட்டு, அமைதியான வாழ்க்கையை மேற்கொண்டுள்ளேன்.

இது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. என்னை நேசிக்கும் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். இனிமேல் எனது பழைய போட்டோ மற்றும் வீடியோக்களை சோஷியல் மீடியாவிலோ, வேறு தளங்களிலோ ஷேர் செய்யாதீர்கள். எனது மனமாற்றம், வயது, உடை, உணர்வு ஆகியவற்றுக்கு மதிப்பு கொடுங்கள்’ என்றார்.

Tags : Mumtaz ,D. Rajendra ,
× RELATED திட்டமிட்டப்படி வெளியாகும் ” பராசக்தி” திரைப்படம்!