செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா பவானி சங்கர், கடந்த 2017ல் ‘மேயாத மான்’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். பிறகு ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மான்ஸ்டர்’, ‘ஓ மணப்பெண்ணே’, ‘யானை’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘ரத்னம்’, ‘டிமான்ட்டி காலனி 2’ உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது, ‘ஹாட்ஸ்பாட் 2 மச்’, ‘டிமான்ட்டி காலனி 3’ ஆகிய படங்களில் நடிக்கிறார். அவர் தனது கல்லூரி காலத்தில் இருந்தே ராஜவேல் ராஜ் என்பவரை காதலித்து வந்தார். இதை பொதுவெளியிலும் சொல்லியிருந்தார். இருவரும் அடிக்கடி அவுட்டிங் சென்று, அந்த போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வந்தனர்.
கடந்த சில நாட்களாக இருவருக்கும் காதல் முறிவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ராஜவேல் ராஜுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை பிரியா பவானி சங்கர் பதிவிட்டுள்ளார். கடந்த 31ம் தேதி பிரியா பவானி சங்கரின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து சொன்ன ராஜவேல் ராஜ், தனது காதலியுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். இதையடுத்து, ஏற்கனவே வெளியான வதந்திகளுக்கு அவர்கள் நிரந்தர முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
