திட்டமிட்டப்படி வெளியாகும் ” பராசக்தி” திரைப்படம்!

 

சிவகார்த்திகேயன், ரவி மோகன் மற்றும் அதர்வா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியுள்ள பராசக்தி திரைப்படத்தின் வெளியீட்டைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மாண்புமிகு நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.

அனைத்து தரப்பினரின் விரிவான வாதங்களைக் கேட்ட பிறகு, நீதிமன்றம் பராசக்தி திரைப்படத்தின் வெளியீட்டைத் தடுக்க மறுத்துவிட்டது. படம் 10.01.2026 அன்று வெளியாகும். இயக்குநர் சுதா கொங்கரா சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமனும், தயாரிப்பாளர் டான் பிக்சர்ஸ் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் சார்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டிக்கனும் ஆஜராகினர்.

 

Related Stories: