அசோக் குமார் நடிக்கும் ‘அலப்பறை’

சென்னை: அரசியலையும், ஆன்மீகத்தையும் கலந்து உருவாகியுள்ள படம், ‘அலப்பறை’. கதை, திரைக்கதை எழுதி சி.எஸ்.காளிதாசன் இயக்கியுள்ளார். அசோக் குமார் ஜோடியாக சாயாதேவி நடித்துள்ளார். மற்றும் பி.எல்.தேனப்பன், ‘யார்’ கண்ணன், நமோ நாராயணன், அன்வர் அலிகான், கோதண்டம், தம்பி சிவன், ஹரிநாத், ரதியா ஹரி, ஆலந்தூர் பிரவீன் குமார், வேல்குமார் நடித்துள்ளனர். ஹரிகாந்த் ஒளிப்பதிவு செய்ய, நிகரன் எழுதிய பாடல்களுக்கு அபி ஜோஜோ இசை அமைத்துள்ளார். (சபேஷ்) முரளி பின்னணி இசை அமைத்துள்ளார். கே.தணிகாசலம் எடிட்டிங் செய்ய, மணிவர்மா அரங்கம் அமைத்துள்ளார். ராதிகா நடனப் பயிற்சி அளிக்க, ஆக்‌ஷன் பிரகாஷ் சண்டைக் காட்சி அமைத்துள்ளார். சிஎஸ்கே சினிமா தயாரித்துள்ளது. ஜி.வி.பாலா வசனம் எழுதியுள்ளார். விரைவில் படம் ரிலீசாகிறது.

Related Stories: