தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்த ‘அர்ஜூன் ரெட்டி’ என்ற படத்தின் மூலம் பிரபலமானவர், ஷாலினி பாண்டே. தமிழில் பல படங்களில் நடித்துள்ள அவர், தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ என்ற படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். தற்போது அவர் ‘பீட்டா’ என்கிற விலங்குகள் நல அமைப்பில் உறுப்பினராக இருக்கிறார். சமீபத்தில் மும்பையில் நடந்த ‘நாய்களை தத்தெடுங்கள், விலைக்கு வாங்காதீர்கள்’ என்ற பீட்டா அமைப்பின் பிரச்சார நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், ‘எனது செல்ல நாய்க்குட்டியின் பெயர், பிர். இதை நான் கடந்த 2021ல் ஹிமாச்சலில் இருந்து காப்பாற்றி, என் வீட்டுக்கு கொண்டு வந்து வளர்க்கிறேன். செல்ல நாய்களுடன் பழகிய இந்த சில வருடங்களில், நான் இன்னும் சிறந்த மனிதநேயம் கொண்டவளாக மாறியிருக்கிறேன். உயர்ந்த ரக நாய்களை விலைக்கு வாங்குவதற்கு பதிலாக, தெருவில் சுற்றித்திரியும் நாய்களை தத்தெடுத்து வளருங்கள்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
