×

இரண்டாவது படத்திலேயே இயக்குனரான நடிகை

ஸ்ரீநாத் புலகுரம் இயக்கத்தில் கடந்த 2024ல் வெளியான ‘பிரபுத்வா ஜூனியர் கலாசாலா’ என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர், ஷக்னா  வேணுன். யதார்த்த காதல் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இதில், தனது நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களின் கவனத்தை ஷக்னா  வேணுன் ஈர்த்தார். அடிப்படையில் ஆடை வடிவமைப்பாளரான இவர், தற்போது தனது இரண்டாவது படத்திலேயே இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

அந்த போஸ்டரில் ஒரு இளம் காதல் ஜோடி கருப்பு உடையில் கையில் ரோஜாவை ஏந்தியடி நிற்பதும், மற்றொரு இளைஞன் அப்பெண்ணின் கையை பிடித்திருப்பது போன்றும் அமைந்துள்ளது. இது காதல் படம் என்பதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஹீரோவாக வருண் சந்தேஷ் நடிக்கிறார். ஷக்னா  வேணுன் இயக்கி ஹீரோயினாக நடிக்கிறார். தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் மார்ச் மாதம் திரைக்கு வரும் இப்படத்தின் டைட்டில் விரைவில் வெளியிடப்படுகிறது.

Tags : Shagna  Venun ,Srinath Bulakuram ,
× RELATED மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்