×

மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்

சென்னை: தமிழில் வெளியான ‘சகாப்தம்’, ‘மதுரவீரன்’, ‘படை தலைவன்’, ‘கொம்புசீவி’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்திருந்த சண்​முக​ பாண்​டியன், அடுத்து மித்​ரன் ஆர்.ஜவஹர் இயக்​கு​ம் புதுப்படத்தில் நடிக்கிறார். தனுஷ் நடித்த ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்​திரன்’, ‘திருச்​சிற்​றம்​பலம்’ மற்றும் ‘மீண்டும் ஒரு காதல் கதை’, ‘மதில்’, ‘அரியவன்’ ஆகிய படங்​களை இயக்​கியுள்ள மித்ரன் ஆர்.ஜவஹர், தற்​போது மாதவன் நடிக்​கும் ‘அதிர்​ஷ்ட​சாலி’ என்ற படத்தை இயக்கி வரு​கிறார்.

இதையடுத்து அவரது இயக்கத்தில் சண்​முக பாண்​டியன் நடிக்கவுள்ள படத்​தை, ‘கொம்​புசீ​வி’ என்ற படத்​தை தயாரித்த ஸ்டார் சினி​மாஸ் தயாரிக்​கிறது. இப்​படத்​தின் பிரீ-புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. தவிர, திரு இயக்கும் படத்தில் நடிக்கவும் சண்முக பாண்டியன் ஒப்பந்தமாகியுள்ளார்.

Tags : Mitran R. Shanmuka Pandian ,Jawahar ,Chennai ,Shanmuka Pandian ,Mitran R. ,Dhanush ,Madhavan ,
× RELATED மாடியில் மயக்கிய பூனம் பஜ்வா