×

பிளாஷ்பேக்கை நினைத்து கண்கலங்கிய சூரி

தமிழில் தனது திரைப்பயணத்தின் தொடக்கத்தில் காமெடி வேடங்களில் மட்டுமே நடித்து வந்த சூரி, தற்போது ஹீரோவாக மாறியிருக்கிறார். கடைசியாக அவர் நடித்த ‘மாமன்’ என்ற படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாடி’ என்ற படத்தில் சூரி ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சூரி, சினிமாவில் தான் அனுபவித்த வலிகள் குறித்து பேசி கண்கலங்கினார்.

அவர் கூறுகையில், ‘எனக்கு பல்வேறு சோதனைகள் மற்றும் கடினமான சவால்களுக்கு பிறகுதான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. அந்த படத்தில் நடிப்பதற்காக எனக்கு டிரஸ் அளவு எடுத்தபோது கை, காலெல்லாம் நடுங்கி கண்கலங்கியது. திடீரென்று அந்த கேரக்டருக்கு வேறொருவரை நடிக்க வைக்க முடிவு செய்தனர். உடனே ஒருவர் வந்து, எனது சட்டையை கழற்றி கொடுக்கும்படி சொன்னார். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதே இடத்தில் சட்டையை கழற்றி கொடுத்தேன். பிறகு எனது எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று நினைத்து வருத்தப்பட்டேன்.

சினிமாவில் ஏதாவது சாதிக்க முடியாதா என்று ஏங்கினேன். நடிக்க வாய்ப்பு கிடைக்காத நிலையில், சரக்கு லாரியில் கிளீனராக வேலை செய்தேன். பிறகு சாக்கடை அள்ளும் வண்டியில் சில நாட்கள் வேலை பார்த்தேன். பிறகு தியாகராய நகர் ஜவுளிக்கடை ஒன்றில் பெயிண்ட் அடிக்க சென்றேன். சென்னையில் இருக்கும் மிகப்பெரிய கட்டிடங்களில் எல்லாம் என் கைகள் படாத இடமே இல்லை என்று சொல்லலாம்’ என்றார்.

Tags : Soori ,Madimaaran Pugazhenthi ,
× RELATED மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்