இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மலையாளத்தில் நிவின் பாலி, பிரீத்தி முகுந்தன் நடித்த ‘சர்வம் மாயா’ என்ற படம் திரைக்கு வந்து வெற்றிபெற்றுள்ளது. இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க துபாய் சென்றிருந்த அவரிடம், 2025ல் வெளியான மலையாள படங்களின் லாப, நஷ்ட கணக்கு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நிவின் பாலி, ‘இதுபோல் லாப, நஷ்ட கணக்குகளை வெளிப்படையாக அறிவிப்பது தேவையற்ற ஒன்று. இதற்கு முன்பு இதுபோல் இருந்தது இல்லை.
இப்படி அறிவித்தால், அது சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்துக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி, புதிதாக படம் தயாரிக்க வருபவர்களையும் தயக்கத்துடன் பின்வாங்க வைத்துவிடும். படத்தின் லாப, நஷ்டம் குறித்த கணக்குகள், அப்படத்தில் சம்பந்தப்பட்டவர்களுடன் மட்டுமே இருப்பது சினிமாவுக்கு நல்லது. அனைத்து திரைப்பட துறையிலும் இந்த விஷயம் உடனே முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு மலையாள திரையுலகம் முன்னோடியாக இருக்க வேண்டும்’ என்றார். அவரது புது ஐடியாவை மலையாள படவுலகினர் ஏற்பார்களா என்று தெரியவில்லை.
