சென்னை: சமீபத்தில் சமந்தா வெளியிட்டுள்ள பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது மும்பை வீட்டில் ஹேஷ், சாஷா ஆகிய நாய்களை வளர்க்கிறார். முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் வாழ்ந்தபோது, இருவரும் சேர்ந்து வாங்கிய நாய், ஹேஷ். விவாகரத்துக்கு பிறகு சமந்தா வாங்கிய நாய், சாஷா. விவாகரத்துக்கு பிறகு கூட சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் வீட்டுக்கு சென்று வருகிறது, ஹேஷ். அதனுடன் நாக சைதன்யா மனைவி சோபிதா துலிபாலா போட்டோ எடுத்து வெளியிட்டிருந்தார்.
அதை ரசிகர்கள் வைரலாக்கி இருந்தனர். ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் சார்பில் ‘சுபம்’ என்ற தெலுங்கு படத்தை தயாரித்து சிறுவேடத்தில் நடித்த சமந்தா, தற்போது ‘மா இண்டி பங்காரம்’ என்ற பன்மொழி படத்தை தயாரித்து ஹீரோயினாக நடிக்கிறார். அவருக்கு ஜிம்மில் ஒர்க்அவுட் செய்வது மிகவும் பிடிக்கும். தொழில்துறையில் முதலீடு செய்ததையும், ராஜ் நிடிமோருவுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடியதையும் அவர் பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் சமந்தா வெளியிட்ட வீடியோ ஒன்றில், முகம் முதல் உடல் முழுவதும் தோல் பிரகாசமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு என்னென்ன செய்கிறார் என்பதை ெசால்லியிருக்கிறார். அவர் கூறுகையில், ‘இந்த ஆண்டில் எனக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் இதுவும் ஒன்றுதான். எனது சருமத்தை பிரகாசமாக
வைத்திருப்பதற்காக நான் மேற்கொண்ட சில முயற்சிகள், காலப்போக்கில் ஒரு சிகிச்சையாகவே மாறிஇருக்கிறது’ என்றார்.
