×

கூட்டணி அமைத்த ஹாரிஸ், ஸ்ரீராம்

தமிழ் படவுலகின் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவர், ஹாரிஸ் ஜெயராஜ். சமீபகாலமாக வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு படங்களுக்கு மட்டுமே அவர் இசை அமைத்து வருகிறார். கடைசியாக ரவி மோகன் நடிப்பில் வெளியான ‘பிரதர்’ என்ற படத்துக்கு இசை அமைத்திருந்தார். தற்போது ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ என்ற படத்துக்கு இசை அமைத்து வருகிறார். ஏ.எல்.விஜய் இயக்கும் இதில் மது மகேஷ், அர்ஜூன் அசோகன், ஜியா சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர் நடிக்கின்றனர்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ‘யம்மா கஜினி’ என்ற பாடலில், தனது நடனத்தால் ஹாரிஸ் ஜெயராஜ் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில், இப்படத்தின் 2வது பாடல் நேற்று வெளியானது. ‘உன்னை நினைத்து’ என்ற இப்பாடலை சித் ராம் பாடியுள்ளார். முதல்முறையாக ஹாரிஸ் ஜெயராஜ், சித் ஸ்ரீராம் கூட்டணி இணைந்துள்ளதால், இப்பாடலுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது அந்த எதிர்பார்ப்பை இப்பாடல் பூர்த்தி செய்துள்ளதாக சொல்கின்றனர்.

Tags : Harris ,Sriram ,Harris Jayaraj ,Ravi Mohan ,A.L. Vijay ,Madhu Mahesh ,Arjun Ashokan ,Jiya Shankar ,M.S. Bhaskar ,Jayaprakash ,Viji Chandrasekhar ,
× RELATED நடிகரின் பேச்சை கண்டித்த அனசுயா