×

நடிகைகளின் கிறிஸ்துமஸ் போட்டோஷூட்

தமிழ் படவுலகில் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடிக்க தீவிரமாக முயற்சித்து வரும் பிரியங்கா மோகன், நடிகர் தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்துக்காக, ‘கோல்டன் ஸ்பாரோ’ என்ற பாடலுக்கு நடனமாடினார். பிறகு ‘தே கால் ஹிம் ஓஜி’ என்ற தெலுங்கு படத்தில் பவன் கல்யாண் ஜோடியாக நடித்தார். தற்போது கவின் ஜோடியாக ஒரு படத்திலும், ‘நித்தம் ஒரு வானம்’ என்ற படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த ரா.கார்த்திக் இயக்கத்தில் ‘மேட் இன் கொரியா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும், கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிக்கும் ‘666 ஆபரேஷன் ட்ரீம் தியேட்டர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர், சிவப்பு நிற உடையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியிட்டுள்ள போட்டோஷூட் ஸ்டில்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தமன்னா, கிரித்தி ஷெட்டி, ரெஜினா, ஐஸ்வர்யா மேனன், இவானா, மமிதா பைஜூ, ருக்மணி வசந்த், கவுரி கிஷன் உள்பட பலர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து, தங்களது போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டுள்ளனர்.

Tags : Christmas ,Priyanka Mohan ,Dhanush ,Pawan Kalyan ,Kavin ,Ra. Karthik ,
× RELATED நடிகரின் பேச்சை கண்டித்த அனசுயா