வேல்ஸ் சென்னை கிங்ஸ் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் அணி அறிமுகம்

சென்னை, டிச.23: வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தரும், வேல்ஸ் குழுமங்களின் தலைவரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவரும், வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மூலம் திரைப்படங்களை தயாரித்து வருபவருமான டாக்டர் ஐசரி கே.கணேஷ் மற்றும் நடிகையும், தயாரிப்பாளரும், இயக்குனருமான பிரியா ராஜ்குமார் இணைந்து, செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடரின் சென்னை அணியை வாங்கியுள்ளனர். இந்த அணிக்கு ‘வேல்ஸ் சென்னை கிங்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த அறிமுக விழாவில், நடிகர் சரத்குமார் மென்டர் ஆகவும், நடிகை மீனா பிராண்ட் அம்பாசிடர் ஆகவும், நடிகர் ஆர்யா அணியின் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் லட்சுமிபதி பாலாஜி, முரளி விஜய், செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் நிறுவனர் விஷ்ணு இந்தூரி, ராதிகா சரத்குமார், வேல்ஸ் குழும நிறுவனங்களின் துணை தலைவர் குஷ்மிதா கணேஷ், ராஜ்குமார் சேதுபதி, நாகார்ஜூனா சேதுபதி, நாடாளுமன்ற உறுப்பினரும் மற்றும் போஜ்புரி அணி கேப்டனுமான மனோஜ் திவாரி, வங்காள அணி உரிமையாளர்கள் போனி கபூர், ராஜ் ஷா, பஞ்சாப் அணி உரிமையாளர்கள் புனித் சிங், நவராஜ் ஹன்ஸ், கேரள அணி கேப்டன் உன்னி முகுந்தன், தெலுங்கு அணி கேப்டன் சச்சின் ஜோஷி, தெலுங்கு அணி வீரர் இசை அமைப்பாளர் தமன் கலந்துகொண்டனர்.

Related Stories: