சென்னை, டிச.23: இயக்கி புரொடக்ஷன்ஸ் சார்பில் அனாமிகா ரவீந்திரநாத், அபிஷேக் ரவீந்திரநாத் தயாரித்துள்ள படம், ‘ரேஜ்’. எம்.எஸ்.நவீன் குமார் ஒளிப்பதிவு செய்ய, விபின்.ஆர் இசை அமைத்துள்ளார். பிரேம்.பி எடிட்டிங் செய்ய, நீலகண்டன் அரங்கம் அமைத்துள்ளார். யுனிவர்ஸ் ராஜேஷ் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். மதன் கார்க்கி, விவேக், திருமாலி, அபிலாஷ் பிரிட்டோ பாடல்கள் எழுதியுள்ளனர். சிவனேசன் எழுதி இயக்கியுள்ளார்.
ஷான், ஷெர்லி பபித்ரா, பவன் ஜினோ தாமஸ், ஆர்யன், பிரதோஷ், விக்ரம் ஆனந்த், சரவணன், முனீஷ்காந்த், ராமச்சந்திரன், மணிகண்டன், அஜித் கோஷி, காயத்ரி ரெமா, கிச்சா ரவி, ‘காலா’ பீம்ஜி நடித்துள்ளனர். படம் குறித்து சிவனேசன் கூறுகையில், ‘இப்படம் ரிவெஞ்ச் திரில்லராக உருவாகியுள்ளது. சென்னையில் வாடகை கார் ஓட்டும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவம், அவன் வாழ்க்கையையே மாற்றுவதுதான் கதை. காதல் கதையுடன், பழிவாங்கும் பின்னணியில் உருவாகியுள்ளது. சென்னை, கேரளா, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது’ என்றார்.
