சென்னை: தமிழ் சினிமாவில் இளம் ஒளிப்பதிவாளர் ஃபரூக் ஜே.பாஷா, பத்து தல, ரோமியோ படங்களின் வெற்றிக்குப் பிறகு தற்போது சோனி லைவ் ஒடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பைக் குவித்து வரும் குற்றம் புரிந்தவன் சீரிஸின் சிறப்பான ஒளிப்பதிவிற்காக பலத்த பாராட்டுக்களை பெற்று வருகிறார்.
அவர் கூறியது: இயக்குனர் செல்வமணி முனியப்பனின் எழுத்து மற்றும் பார்வை மிகத் தெளிவாக இருந்தது. இந்த சீரிஸின் திரைக்கதை முழுக்க இயல்புத்தன்மையும், உளவியல் ஆழமும் கொண்டதாக இருந்தது. விளம்பர படங்கள் எப்போதும் ஒளிப்பதிவாளரை நம்பித்தான் இருக்கும், ஒரு நிமிடத்தில் ரசிகனை அசையவிடாமல் இழுத்துப் பிடிக்க வேண்டும். விளம்பரம் ஒவ்வொரு ஃப்ரேமும் அழகாக இருக்க வேண்டும். 500 க்கும் மேற்பட்ட உள்நாட்டு வெளிநாட்டு விளம்பரங்கள் செய்துள்ளேன். எல்லாமே மிகச்சிறந்த அனுபவம்.
நடிகர் அமிதாப்பச்சன் சொன்ன நேரத்தில் செட்டில் இருப்பார். அவரது அர்ப்பணிப்பு ஆச்சரியம் தந்தது. நிறைய நடிகர்களுடன் வேலை பார்த்திருந்தாலும் கமல்ஹாசன் சாருடன் மையம் விளம்பரத்துக்காக வேலை பார்த்தது மறக்க முடியாத அனுபவம்.
