நடிக்க வந்த புதிதில் சாய் பல்லவி அளித்த பேட்டியில், பிரபலமானவர்களின் பயோபிக்கில் நடிக்க அதிக ஆர்வம் இருப்பதாக சொல்லியிருந்தார். அவரது ஆசை விரைவில் நிறைவேறும் என்று தெரிகிறது. மறைந்த கர்நாடக இசை பாடகியும், நடிகையுமான எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பயோபிக் தெலுங்கில் படமாக்கப்படுகிறது. இதை கீதா ஆர்ட்ஸ் தயாரிக்கிறது. எம்.எஸ்.சுப்புலட்சுமி வேடத்தில் நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.
ஏற்னவே கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பில் நாக சைதன்யா நடித்த ‘தண்டேல்’ என்ற படத்தில் சாய் பல்லவி நடித்திருந்ததால், எம்.எஸ்.எஸ் பயோபிக்கில் நடிக்க சம்மதிப்பார் என்று தெரிகிறது. தற்போது இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் 2 பாகங்களாக உருவாக்கப்படும் ‘ராமாயணா’ என்ற படத்தில், சீதை கேரக்டரில் அவர் நடித்து வருகிறார்.
