அரசு பள்ளி ஆசிரியர் பிரபாகரனை மதுபானக்கடை ஓனர் லெனின் வடமலை, பழிவாங்க துடிக்கிறார். அப்போது வரும் புதிய டீச்சர் மெகாலி மீனாட்சியை பிரபாகரனுடன் இணைத்து பேசுகிறார். மெகாலி மீனாட்சி யார் என்பது மீதி கதை. சமூக பிரச்னைகளை அழுத்தமாக பேசும் கதையை கமர்ஷியலாக எழுதி இயக்கி வில்லனாக நடித்துள்ள லெனின் வடமலை, தனது ேமனரிசங்களில் மறைந்த டேனியல் பாலாஜியை நினைவுபடுத்துகிறார். அவரது பழிவாங்கும் வெறியும், நடிப்பும் சிறப்பாக இருக்கிறது. குடும்பப்பாங்கான கேரக்டரில் மெகாலி மீனாட்சியும், உரிமைகளுக்காக போராடும் ஆசிரியராக பிரபாகரனும் போட்டி போட்டு நடித்துள்ளனர்.
சிறுவன் துகின் சேகுவேரா, சிறப்பாக நடித்துள்ளார். இதர கேரக்டர்களில் வருபவர்களும் யதார்த்தமாக நடித்துள்ளனர். லெனின் வடமலை எழுதிய பாடல்களுக்கு சவுந்தர்யன், ஜெய்குமார் இசை அமைத்துள்ளனர். கதையை நகர்த்த ஜெய்குமாரின் பின்னணி இசை உதவியுள்ளது. கிராமத்து பசுமையை கண்முன் கொண்டு வந்து அசத்தியுள்ளார், ஒளிப்பதிவாளர் ஜான்ஸ் வி.ஜெரின். எடிட்டர் ராமின் பணி கச்சிதமாக இருக்கிறது. மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டியதன் அவசியத்தை படம் வலியுறுத்துகிறது.

