×

திருமணமாகி 14 ஆண்டுகள் கடந்த நிலையில் இயக்குனர் செல்வராகவன், கீதாஞ்சலி விவாகரத்து?

சென்னை: தனுஷின் அண்ணனும், இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் விவாகரத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். கடந்த சில வருடங்களாக தனுஷ், ஐஸ்வர்யா மற்றும் ரவி மோகன், ஆர்த்தி மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான், சாய்ரா பானு மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமார், பாடகி சைந்தவி ஆகிய தம்பதிகளின் விவாகரத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த 2011ல் தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலி என்பவரை செல்வராகவன் காதலித்து திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு லீலாவதி என்ற மகள் மற்றும் ஓம்கார், ரிஷிகேஷ் ஆகிய மகன்கள் இருக்கின்றனர். கீதாஞ்சலியும் இயக்குனர்தான். அவர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘மயக்கம் என்ன…’ என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். கடந்த 2016ல் வெளியான ‘மாலை நேரத்து மயக்கம்’ என்ற படத்தை இயக்கினார். பிறகு அவர் திரைத்துறையை விட்டு ஒதுங்கி, தனது குடும்பத்தை கவனித்து வந்தார்.

இந்த ஜோடிக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது அவர்களை பற்றிய விவாகரத்து செய்தி, சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், கீதாஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து செல்வராகவனின் போட்டோக்கள் அனைத்தையும் நீக்கியுள்ளார். இதனால், அவர்கள் இருவரும் பிரிந்துவிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

எதற்காக செல்வராகவன் போட்டோக்களை நீக்கினார் என்பது பற்றி கீதாஞ்சலி சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தனது இயக்கத்தில் ‘காதல் கொண்டேன்’, ‘7/ஜி ரெயின்போ காலனி’ ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்த சோனியா அகர்வாலை காதல் திருமணம் செய்து, கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து மூலம் அவரை பிரிந்தவர் செல்வராகவன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Selvaraghavan ,Geethanjali ,Chennai ,Dhanush ,Aishwarya ,Ravi Mohan ,Aarthi ,A.R. Rahman ,Saira Banu ,G.V. Prakash Kumar ,Sainthavi ,Leelavathi ,Omkar ,Rishikesh ,
× RELATED மாண்புமிகு பறை விமர்சனம்…