×

விது, பிரீத்தி அஸ்ரானி நடிக்கும் 29

 

சென்னை: ‘மேயாத மான்’, ‘ஆடை’, ‘குலு குலு’ ஆகிய படங்களை தொடர்ந்து ரத்னகுமார் எழுதி இயக்கியுள்ள படம், ‘29’. விது, பிரீத்தி அஸ்ராணி, அனுஸ்ரீ வேகன், ஸ்ரேயாஸ் பாத்திமா நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். சதீஷ்குமார் எடிட்டிங் செய்துள்ளார். ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ், ஜீ ஸ்குவாட் சார்பில் கார்த்திகேயன்.எஸ், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் டைட்டில் லுக் வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது. அப்போது ரத்னகுமார் பேசுகையில், ‘பிரீத்தி அஸ்ரானியிடம் கதை சொன்னேன்.

‘சில காட்சிகள் நெருடலாக இருப்பதால், நடிக்க மனம் வரவில்லை’ என்றார். அவர் மறுத்ததால் திரைக்கதையில் சில மாற்றங்களை செய்தேன். அதற்கு பிறகு படத்தின் தோற்றம் மாறிவிட்டது. ‘நோ’ ெசான்ன அவருக்கு நன்றி’ என்றார். கார்த்திக் சுப்பராஜ் பேசும்போது, ‘இது தனுஷ் நடிக்க மறுத்த கதை. அவர் ஆக்‌ஷன் படங்களில் நடித்து வருவதால், வேறு யாராவது நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று சொன்னார். பிறகு விது ஹீரோவாக தேர்வானார்’ என்றார்.

Tags : Vidhu ,Preethi Asrani ,Rathnakumar ,Anushree Wagon ,Shreyas Fatima ,Mathesh Manickam ,Shaun Roldan ,Sathish Kumar ,Karthikeyan.S ,Lokesh Kanagaraj ,Stone Bench Films ,Zee Squad ,
× RELATED டியர் ரதி பிரச்னையில் சிக்கும் டேட்டிங் ஜோடி