×

ஈழத்தமிழர்கள் உருவாக்கிய ஆங்கிலத் திரைப்படம் ‘‘ இன்ஃப்ளூயன்சர்’’!

ஒரு தம்பதியினர் அதிகமான பார்வையாளர்களை ஈர்க்க வைப்பதற்காக இலங்கையின் பழைய திகில் கதைகளை ஆய்வு செய்ய பயணம் மேற்கொள்கிறார்கள். ஆனால் அவர்களின் பயணம் ஒரு காட்டுக்குள் சிக்கிக் கொள்ளும் பொழுது பயங்கரமான திருப்பத்தை ஏற்படுத்துகிறது. உள்ளூர் குடும்பத்தால் மீட்கப்பட்ட அவர்கள்; உண்மையான திகில் மனித இயல்பில் இருளில் தான் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கிறார்கள்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஃப்ளோரன்ஸ் சிம்ப்சன் கதாநாயகியாகவும், மால்டாவை சார்ந்த டேன் ஹாலண்ட் நாயகனாகவும் இலங்கை நடிகர்களான துளிகா மரப்பனா, பிரியங்கா அமர்சிங், வனிதா சேனாதிராஜா, தேவ அலோசியஸ் ஆகியோர் இந்த இன்ஃப்ளூயன்சர்’’ படத்தில் நடித்திருக்கிறார்கள். படத்துக்கு இயக்கம், நீரோ கில்பர்ட், ஒளிப்பதிவு சிவசாந்தகுமார், படத்தொகுப்பு செய்கிறார் சுஜித் ஜெயக்குமார், இம்மூவரும் 20 ஆண்டுகளுக்கு முன்பு புலம்பெயர்ந்த ஈழ தமிழர்கள் மற்றும் இன்றைய ஐரோப்பா பிரஜை. ராபின் ஏ டவுன் சென்ட் இணை தயாரிப்பாளர்களா பணிபுரியும் இப்படத்தை தயாரித்திருக்கிறார் எட்டெர்னல் ஐகான் பிலிம்ஸ் மற்றும் நியூ பிச் நிறுவனங்கள்.

ஹரிசங்கர் ஜனார்த்தனம் , விதுசன் ஆண்டனி ஆகியோ முதன்மை தயாரிப்பில் பணியாற்றுகிறார்கள். முதன்மை தயாரிப்பாளர்களுள் ஒருவரான ஹரிசங்கர் ஜனார்த்தனம் பிரபல ஒளிப்பதிவாளர் திரு.ஜி. பி கிருஷ்ணாவிடம் உதவி ஒளிப்பதிவாளராகவும், இயக்குனர் மிஷ்கின் அழைப்பில் புகைப்படக் கலைஞராக 35 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். இந்த ஆங்கில படத்தில் முதன்மை தயாரிப்பாளராகவும் புகைப்படக் கலைஞராகவும், பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இப்படத்தில் டீசர் சில நாட்களுக்கு முன் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது இப்படத்தில் மலையக மற்றும் ஈழத்தமிழ் இளைஞர்கள் பலர் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Eelam Tamils ,Florence Simpson ,England ,Dane Holland ,Malta ,Thulikaa Marappana ,Priyanka Amarsingh ,Vanitha ,
× RELATED துப்பாக்கி, பில்லா 2 பட வில்லன் வித்யூத் ஜம்வால் நிர்வாண ‘போஸ்’