மும்பை: துப்பாக்கி வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வால் பெரிய அளவில் ரீச் ஆனார். இதை தொடர்ந்து ஹிந்தியில் பல படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தினார். தமிழில் அஞ்சான், பில்லா 2 படங்களிலும் நீண்ட இடைவேளைக்கு பிறகு மதராஸி படத்திலும் வில்லனாக நடித்து மிரட்டினார். தற்போது ஸ்ட்ரீட் பைட்டர் என்ற ஹாலிவுட் படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் இவர் தன் இன்ஸ்டா பக்கத்தில் உடலில் துணியே இல்லாமல் மரத்தில் ஏறும் ஒரு வீடியோவை அப்லோட் செய்து ரசிகர்கள் அனைவரையும் ஷாக் ஆக்கியுள்ளார், இது இணையத்தில் பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது. ஏற்கனவே ரன்வீர் சிங் நிர்வாண போஸ் கொடுத்தது சர்ச்சையானது. இப்போது வித்யூத்தின் இந்த போஸும் பலத்த எதிர்ப்புக்குள்ளாகி வருகிறது.
