×

ட்ரோல்களால் பல இரவுகள் தூங்கவில்லை: விஜய் தேவரகொண்டா வேதனை

ஐதராபாத்: தங்களது படத்திற்கு சக போட்டியாளர்களின் ரசிகர்களால் ஏதும் இழுக்கு ஏற்படலாம் இருக்க சிரஞ்சீவியின் ‘மன சங்கர வரபிரசாத் காரு’ படக்குழுவினர் ஆன்லைன் டிக்கெட் இணையதளத்தில் ரேட்டிங் போடுவதற்கு நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்றுள்ளனர். இதனால், அந்தப் படத்திற்கு ஆன்லைனில் டிக்கெட் புக் செய்பவர்கள் ரேட்டிங் போட முடியாது.

இந்நிலையில் இளம் ஹீரோவான விஜய் தேவரகொண்டா, நடிகர் சிரஞ்சீவிக்கு ஆதரவு தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். குறிப்பாக அவர் நடித்து வெளிவந்த ‘லீகர்’ படம் வந்தபோது சமூக வலைதளங்களில் குறி வைத்து தாக்கப்பட்டார். இது குறித்து விஜய் தேவரகொண்டா தனது பதிவில் கூறியிருப்பது: நீதிமன்ற உத்தரவைப் பார்த்து சந்தோஷமும் சோகமும் ஏற்பட்டுள்ளது. பலரின் கடின உழைப்பு, கனவுகள் மற்றும் பணம் ஒரு வகையில் பாதுகாக்கப்படுவதை அறிந்து சந்தோஷம்.

நம்முடைய சொந்த மக்களே (ரசிகர்கள், திரையுலகினர் சிலர்) இந்த பிரச்னைகளை ஏற்படுத்துவது சோகத்தை தந்துள்ளது. ‘டியர் காம்ரேட்’, லீகர் பட நாட்களிலிருந்து நான் முதலில் அதிர்ச்சியூட்டும் அமைப்புசார் தாக்குதல்களின் அரசியலைப் பார்க்கத் தொடங்கினேன். தொடர்ந்து ட்ரோல் செய்யப்பட்டேன். இந்த ஆண்டுகளில் என் குரல் கேட்காதவர்களின் காதுகளில் விழுந்தது. நான் பல இரவுகளை தூங்காமல் இருந்து, இதையெல்லாம் செய்பவர்கள் யார், அவர்களை எப்படி கையாள்வது என்பதைப் பற்றி
யோசித்திருக்கிறேன்.

என் கனவுகளையும் என்னைப் போல வரும் மற்றும் எனக்குப் பிறகு வரும் பலரின் கனவுகளையும் பாதுகாக்க. மெகா ஸ்டாரான சிரஞ்சீவி படத்துக்கே இதுபோன்ற அச்சுறுத்தல்கள் இருப்பது வேதனை தருகிறது. நீதிமன்ற உத்தரவு, இந்த பிரச்னையை முழுமையாக தீர்க்குமா என்பது தெரியாது. ஆனால் கவலைப்பட வேண்டிய ஒரு விஷயம் குறைவாக இருக்கும். சங்கராந்திக்கு வெளியாகும் அனைத்து படங்களும் மிகப்பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள். இவ்வாறு விஜய் தேரவகொண்டா கூறியுள்ளார்.

Tags : Vijay Deverakonda ,Hyderabad ,Chiranjeevi ,Mana ,Karu ,
× RELATED தமன்னா நடிக்கும்‘ஓ ரோமியோ’