விஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு

சென்னை: சென்னை மீனம்பாக்கம் ஏ.எம் ஜெயின் கல்லூரியில் விஜய் ஆண்டனியின் 3.0 என்ற இசை நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக மெட்ரோ ரயில்களின் நேரத்தை மாற்றியமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இசை நிகழ்ச்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டது. இந்நிலையில், ஏ.எம் ஜெயின் கல்லூரியில் 20 ஆயிரம் பேர் கூடினால் வசதிகள் செய்ய முடியாது. போக்குவரத்து கடுமையாக பாதிக்கக்கூடும்.

குடியிருப்புகள் நிறைந்த பகுதி என்பதால் பாதிப்புகள் ஏற்படும் என்று கூறப்பட்டது. இதையடுத்து விஜய் ஆண்டனியின் 3.0 என்ற இசை நிகழ்ச்சிக்கு அனுமதி கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக, போலீஸ் தரப்பில் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகவும், மெட்ரோ ரயில்கள் வழக்கமான நேரத்தில் இயக்கப்படும் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: