2025 புத்தாண்டு கொண்டாட்டம் அமிதாப் பேரனுடன் படகில் சென்ற ஷாருக்கான் மகள்

மும்பை: ஷாருக்கானுக்கு அலிபாக்கில் கடற்கரை மற்றும் மலைகளுக்கு அருகில் மிகப்பெரிய ஒரு பண்ணை வீடு இருக்கிறது. இது 23 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. ஷாருக்கான் மகள் சுஹானா கான் தற்போது இந்தியில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அவர் முதன்முதலாக அமிதாப் பச்சன் பேரன் அகஸ்தியா நந்தாவுடன் இணைந்து வெப்சீரிஸ் ஒன்றில் நடித்தார். அதிலிருந்து இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. சமீபகாலமாக இருவரும் வெளிப்படையாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கின்றனர்.

இதனால் இருவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது. அமிதாப் பச்சன் குடும்ப நிகழ்ச்சிகளில் சுஹானா கான் தவறாமல் பங்கேற்று வருகிறார்.  கடந்த 26ம் தேதி மாலை சுஹானா கானும், அகஸ்தியா நந்தாவும் ஒரு படகு மூலம் புறப்பட்டு, அருகிலுள்ள கடற்கரை நகரான அலிபாக் சென்றனர். இதற்காக இருவரும் மும்பை கேட்வே ஆஃப் இந்தியாவுக்கு வந்தனர். அவர்கள் அங்கிருந்து ஒரு ஆடம்பர படகு மூலம் அலிபாக் புறப்பட்டனர். அலிபாக்கில் ஷாருக்கானுக்கு கடற்கரை மற்றும் மலைகளுக்கு அருகில் மிகப்பெரிய ஒரு பண்ணை வீடு இருக்கிறது.

23 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அந்த பண்ணை வீட்டில், அவர்களுடன் மேலும் சில பாலிவுட் நண்பர்களும் கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது. சுஹானா கானும், அகஸ்தியா நந்தாவும் படகில் ஏற நடந்து சென்றது மற்றும் அந்தப் படகில் இருவரும் இருப்பது போன்ற ஒரு வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. தற்போது சுஹானா கான் தனது தந்தை ஷாருக்கானுடன் இணைந்து ‘கிங்’ என்ற இந்திப் படத்தில் நடிக்கிறார். வரும் 2025 புத்தாண்டு பிறக்கும் விழாவை கோலாகலமாக கொண்டாடும் நோக்கத்திலேயே சுஹனா கானும், அகஸ்தியா நந்தாவும் அலிபாக் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: