கேன்ஸர் பாதித்த ரசிகரின் மருத்துவ செலவை ஏற்றார் ஜூனியர் என்டிஆர்

ஐதராபாத்: புற்றுநோய் பாதித்த ரசிகரின் மருத்துவ செலவுகளை ஏற்றுள்ளார் ஜூனியர் என்டிஆர். தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த கவுசிக் என்பவர், ஜூனியர் என்டிஆரின் தீவிர ரசிகர். இவர் எலும்பு புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். இது பற்றி தகவல் அறிந்த ஜூனியர் என்டிஆர், கவுசிக்கின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் ஏற்பதாக தெரிவித்தார். இதற்கிடையே சமீபத்தில் கவுசிக் டிஸ்சார்ஜ் ஆனார். இது தொடர்பாக அவரது அம்மா பேட்டி தந்தபோது, ‘மகனின் மருத்துவ செலவுக்கு உதவுவதாக சொன்ன ஜூனியர் என்டிஆர், எங்களுக்கு உதவவில்லை’ என்றார். இந்த பேட்டி வைரலானது. இது தொடர்பாக தனது மேனேஜரை அழைத்து ஜூனியர் என்டிஆர் விசாரித்துள்ளார். அப்போதுதான் கவுசிக்கின் மருத்துவ செலவுக்கான பணம் அனுப்பவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து மேனேஜரை கடிந்துகொண்ட ஜூனியர் என்டிஆர், உடனடியாக மருத்துவமனைக்கு ஆன செலவுகளை கணக்கிட்டு கவுசிக் வீட்டுக்கு சென்று வழங்கினார்.

Related Stories: