×

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் செவப்பி

சென்னை: சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ‘செவப்பி’ திரைப்படம் இன்று திரையிடப்படுகிறது. ஆஹா ஓடிடியில் வெளியான ‘செவப்பி’ படத்தை எம்எஸ்.ராஜா இயக்கியிருந்தார். கோவையை சேர்ந்த சிறுவன் ஷ்ரவன் கதையின் நாயகனாக நடித்திருந்தான். இந்த சிறுவன், தயாரிப்பாளர் பழனிச்சாமியின் பேரன். ‘நான் பாடும் பாடல்’ படத்தை தயாரித்தவர்தான் அரிமா முத்து ஆர்.பழனிசாமி. மோகன், சிவகுமார், அம்பிகா நடித்த இந்த படத்தை ஆர்.சுந்தர்ராஜன் இயக்கியிருந்தார். மேலும் சில படங்களை பழனிசாமி தயாரித்துள்ளார். ‘செவப்பி’ படத்தில் செபஸ்டின் அந்தோணி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்துக்காக ஐவிஎம் புஷ் நிறுவன விருதை சிறுவன் ஷ்ரவன் பெற்றுள்ளான். விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டுப்பெற்ற இப்படம் இன்று பகல் 11.45 மணிக்கு சென்னை சத்யம் தியேட்டரிலுள்ள சீசன் திரையில் திரையிடப்படுகிறது.

Tags : Chennai International Film Festival ,Chennai ,Aha ,MS. ,Shravan ,Goa ,Palanichami ,
× RELATED 12ம் தேதி முதல் சென்னை சர்வதேச திரைப்பட விழா