×

எனது பள்ளி பருவத்தை படமாக்குவேன்: யோகி பாபு

சென்னை: யோகி பாபு நடிக்கும் ‘ஸ்கூல்’ படத்தை ஆர்.கே. வித்யாதரன் இயக்கி, தயாரித்துள்ளார். இளையராஜா இசையமைத்து இருக்கிறார். பூமிகா சாவ்லா, கே.எஸ். ரவிக்குமார், நிழல்கள் ரவி, பக்ஸ், சாம்ஸ், பிரியங்கா வெங்கடேஷ் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய யோகி பாபு, ‘இயக்குனர் என்னை முதலில் கூப்பிடும்போது பியூன் கதாபாத்திரம் என்று தான் சொன்னார். வாத்தியார் கதாபாத்திரத்திற்கு ஆள் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். அதனால் தான் என்னை வாத்தியார் ஆக்கிவிட்டார்.

நான் படித்ததெல்லாம் அரசு பள்ளியில் தான். நான் படித்த ஸ்கூல் கதையை படமாக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறேன். வித்யாதரன் சார் மனது வைத்தால் கண்டிப்பாக அதை படமாக செய்துவிடலாம். தாமு அண்ணன் பார்த்து தான் நானெல்லாம் நடிக்கவே வந்தேன். அவரோடு நடிக்க ஆசை. அண்ணா, நாம் மீண்டும் நடிக்கலாம். இளையராஜா சார் என்றுமே அவர்தான் ராஜா. அவர் அருமையான இசையை தந்திருக்கிறார். அவர் இசையில் நடித்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. படம் நன்றாக வந்திருக்கிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள்’ என்றார்.

Tags : Yogi Babu ,Chennai ,RK Vidyadharan ,Ilayaraja ,Bhumika Chawla ,KS Ravikumar ,Nizhalgal Ravi ,Bucks ,Sams ,Priyanka Venkatesh ,
× RELATED சபரிமலை பக்தர்களின் கதை சன்னிதானம்