×

டாக்டர் தயாரிப்பாளர் நோயாளி டைரக்டர்: பேரரசு ருசிகரம்

விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கே.செந்தில் வேலன் தயாரித்திருக்கும் படம் ‘சீசா’. அறிமுக இயக்குநர் குணா சுப்பிரமணியம் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் கதையை தயாரிப்பாளர் செந்தில் வேலன் எழுதியிருக்கிறார். இதில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, மற்றொரு நாயகனாக நிஷாந்த் ரூசோ நடித்திருக்கிறார். நாயகியாக பாடினி நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆதேஷ் பாலா, மூர்த்தி, தயாரிப்பாளர் செந்தில் வேலன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

சரண் குமார் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பெருமாள் மற்றும் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். வில்சி ஜெ.சசி படத்தொகுப்பு செய்திருக்கிறார். வரும் ஜனவரி 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘சீசா’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா டிசம்பர் 15 ஆம் தேதி, சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் கஸ்தூரி ராஜா, பேரரசு, மைக்கேல், தயாரிப்பாளர் கே.ராஜா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், “சிறிய படங்களை வாழ்த்துவதற்கு பெரிய மனசு வேண்டும். அப்படி இந்த படத்தை வாழ்த்த நேரம் ஒதுக்கி இங்கு வந்திருக்கும் கே.ராஜன் சார், கஸ்தூரி ராஜா சார் ஆகியோருக்கு நன்றி.திரையுலகில் வாரிகள் ஜெயிக்க திறமை வேண்டும். அறிமுகம் எளிமையாக இருக்கும், ஆனால் நிலைத்து நிற்க திறமை தான் வேண்டும். கஸ்தூரி ராஜா சாரின் மகன்கள் என்பதால் செல்வராகவன் இயக்குநராகவும், தனுஷ் நடிகராகவும் அறிமுகம் ஆகலாம். ஆனால், அவர்கள் இன்று முன்னணியில் இருப்பதற்கு அவர்களின் திறமை தான் காரணம். அதேபோல், திறமை மட்டும் போதாது ஜெயிக்க வேண்டும் என்ற வெறி வேண்டும். சீசா என்பது ஒரு விளையாட்டு, அது அனைவருக்கும் தெரியும். நிறைய பூங்காக்களில் சீசா இருக்கும்.

விளையாட்டுக்களிலேயே சிறந்த விளையாட்டு சீசா தான். மற்ற விளையாட்டுகளில் தோற்பவர்களை பார்த்து ரசிப்பார்கள். ஆனால், இந்த விளையாட்டில் தோற்பவரை பார்த்து வெற்றி பெற்றவர் ரசிப்பர், அதே சமயம், வெற்றி பெற்றவர் தோற்பார், ஏறும், இறங்கும். அப்படிப்பட்ட விளையாட்டின் பெயரை தலைப்பாக வைத்து இயக்குநராக அறிமுகமாகும் குணாவுக்கு இனி எல்லாமே ஏற்றம் தான். அவரிடம் எனக்கு பிடித்த விசயம் கடவுள் பக்தி. இயக்குநராக முயற்சிக்கும் போது, ஒரு தயாரிப்பாளரை சந்தித்து கதை சொல்லி, அவரை பல வருடங்களாக பின் தொடர்ந்து வாய்ப்பு பெற்று படம் செய்தால் அது முயற்சி. ஆனால், எங்கேயோ இருக்கும் டாக்டர் செந்தில் வேலனை ஒரு நோயாளியாக சந்திக்க, இவரைப் பற்றி அவர் விசாரித்து தெரிந்துக்கொண்டதோடு அல்லாமல் அவருக்காக படம் தயாரிக்க முன் வந்திருக்கிறார் என்றால் இது முயற்சி அல்ல கடவுள் செயல்’’ என்றார்.

Tags : Dawn Studios ,Sendyl Waylon ,Guna Subramaniam ,Senthil Whelan ,Natty Natraj ,Nishant ,
× RELATED ஆஸ்கர் போட்டியிலிருந்து லாபத்தா லேடீஸ் வெளியேறியது