×

ஹரீஷ் கல்யாணுக்கு மாமியாராக நடிக்க பயந்தேன்: சுவாசிகா

சென்னை: தியேட்டர்களிலும், ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ள படம், ‘லப்பர் பந்து’. இதில் ஹரீஷ் கல்யாணின் மாமியாராக நடித்திருந்தவர், மலையாள நடிகை சுவாசிகா விஜய். அவர் கூறியதாவது: தமிழில் பல வருட இடைவெளிக்குப் பிறகு நடித்த எனக்குக் கிடைத்த வரவேற்பு என் மனதை நெகிழ வைத்தது. அசோதா போன்ற கேரக்டர் கிடைப்பது உண்மையிலேயே ஒரு வரம். பா.ரஞ்சித், விஜய் சேதுபதி, மாரி செல்வராஜ், சிவகார்த்திகேயன் உள்பட பலர் போன் செய்து, என் நடிப்பை பாராட்டினார்கள்.

இந்த கேரக்டரில் நடிக்க பல நடிகைகளிடம் பேசியதாகவும், ஹரீஷ் கல்யாணுக்கு மாமியாராக நடிக்க அவர்கள் தயங்கியதாகவும் ஒரு தகவலை கேள்விப்பட்டேன். ஆரம்பத்தில் எனக்கும் அந்த பயம் இருந்தது. ஒருகட்டத்தில், `ஹரீஷ் கல்யாணுக்கு மாமியாராக நடித்தவர்’ என்று முத்திரை குத்திவிடுவார்களோ என்று தயங்கினேன். ஆனால், அதையும் மீறி அசோதா கேரக்டர் எனக்கு அதிக நம்பிக்கையைக் கொடுத்தது. எல்லோருக்கும் என் வயது தெரியும். அதனால், ரிஸ்க் எடுக்க தயங்கக் கூடாது என்று தயாரானேன். இப்போது என் நடிப்பை அனைவரும் பாராட்டுகின்றனர். எனவே, வயதைக் காரணம் காட்டி எந்தவொரு வாய்ப்பையும் இழந்துவிடக்கூடாது.

Tags : Harish Kalyan ,Swasika ,CHENNAI ,Swasika Vijay ,
× RELATED ஹரீஷ் கல்யாணின் டீசல் படத்தில் கானா ஸ்டைலில் பீர் சாங்