சென்னை: ‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் நடிக்கும் படம், ‘டீசல்’. இது ஹரீஷ் கல்யாணின் சினிமா கேரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள படமாகும். அதுல்யா ரவி, விநய் ராய், சாய்குமார், அனன்யா, கருணாஸ், விவேக் பிரசன்னா, சச்சின் கடேகர், ஜாகீர் உசேன், தங்கதுரை, கேபிஒய் தீனா நடித்துள்ளனர். தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட், எஸ்பி சினிமாஸ் சார்பில் தேவராஜூலு மார்க்கண்டேயன் தயாரித்துள்ளார்.
ரிச்சர்ட் எம்.நாதன், எம்.எஸ்.பிரபு இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசை அமைத்துள்ளார். சண்முகம் முத்துசாமி எழுதி இயக்கியுள்ளார். பொதுவாக திபு நினன் தாமஸ் மெல்லிசைப் பாடல்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவார் என்ற எண்ணத்தை உடைத்து, ‘டீசல்’ படத்தில் கானா ஸ்டைலில் உருவாகியுள்ள ‘பீர் சாங்’ மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.