யார் இந்த லாரன்ஸ் பிஷ்னோய்

பஞ்சாபின் பெரோஸ்பூரை சேர்ந்த அரியானா காவலரின் மகனான லாரன்ஸ் பிஷ்னோய் (32), பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தவர். கல்லூரி காலங்களில் மாணவர் பேரவை அரசியலில் தீவிரம் காட்டினார். அப்போதுதான் கோல்டி பிரார் எனும் சத்தீந்தர் சிங் நண்பரானார். இருவர் மீதும் கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி போன்ற 7 வழக்குகள் 2012 வரை பதிவாகின. இதில் கைதான லாரன்ஸ் பிஷ்னோய் மீது தற்போது வரை 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

சிறைக்குள் சக கைதிகளின் நட்பை பெற்ற லாரன்ஸ், ஜாமீனில் விடுதலையாகி ஆயுத கடத்தலில் ஈடுபட்டார். அப்போது, தன்னுடன் மோதிய முக்ஸ்தர் என்பவரை சுட்டு கொலை செய்தார். கடந்த 2014ல் ராஜஸ்தான் போலீசாருடனான என்கவுன்ட்டரில் மீண்டும் கைதான லாரன்ஸ் பிஷ்னோய் சிறையில் அடைக்கப்பட்டார். பிஷ்னோய் சமூகத்தினர் மான் உள்ளிட்ட விலங்குகளை புனிதமாகக் கருதுபவர்கள். இதனால், மான் வேட்டை புகாரில் சிக்கிய பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொல்ல லாரன்ஸ் பிஷ்னோய் முடிவு செய்து, அதற்காக பலமுறை முயன்றுள்ளார்.

The post யார் இந்த லாரன்ஸ் பிஷ்னோய் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: