×

மஞ்சள் வீரனிலிருந்து டிடிஎஃப் வாசன் நீக்கம்

சென்னை: ‘மஞ்சள் வீரன்’ என்கிற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக யூடியூபர் டிடிஎஃப். வாசன் அறிமுகமாக இருந்தார். இயக்குநர் செல் ஆம் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருபிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், போஸ்டர் வெளியான பிறகு, படம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில், மஞ்சள் வீரன் படத்திலிருந்து தற்போது டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டு வேறு ஹீரோ வைத்து படம் எடுக்க உள்ளனர். டிடிஎஃப். வாசனிடம் கால்ஷீட் கேட்ட போது சரியாக பதில் வரவில்லை, ஹீரோ ஒத்துழைக்கவில்லை. இதனால், அதே படம் வேறு ஹீரோ நடிப்பில் வெளிவரும் என இயக்குநர் செல்அம் கூறியுள்ளார்.

The post மஞ்சள் வீரனிலிருந்து டிடிஎஃப் வாசன் நீக்கம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : YELLOW ,Chennai ,DTF ,Cell Am ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மஞ்சள் இயற்கை 360°