சென்னை: டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை வனிதா விஜயகுமார் 4வதாக திருமணம் செய்ய இருப்பதாக தகவல் பரவியுள்ளது. நடிகை வனிதா விஜயகுமார், 2000ம் ஆண்டில் சின்னத்திரை நடிகர் ஆகாஷை காதலித்து மணந்தார். இவர்களுக்கு மகன் விஜய் ஸ்ரீஹரி இருக்கிறார். அவர் இப்போது ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். 7 ஆண்டுகள் ஆகாஷுடன் வாழ்ந்த வனிதா, கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார். பிறகு அதே ஆண்டில் ராஜன் ஆனந்த் என்பவரை திருமணம் செய்தார். 2012ல் அவரையும் பிரிந்தார். மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்தார்.
அதே ஆண்டில் பீட்டர் பாலுடன் சண்டை போட்டு பிரிந்துவிட்டார். இந்த நிலையில் வனிதா, டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுக்கு காதலை வெளிப்படுத்துவது போல் போஸ் கொடுத்து அக்டோபர் 5 காத்திருங்கள் என இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். ராபர்ட் மாஸ்டரை வனிதா 4வது திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. மேலும், வருகிற அக்டோபர் 5ம் தேதி இவர்களின் திருமணம் நடைபெறவிருப்ப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு, திருமண பத்திரிக்கையும் வெளியாகியுள்ளது.
வனிதாவும், ராபர்ட் மாஸ்டரும் பல வருடங்களுக்கு முன்பே ஒருவரை ஒருவர் காதலித்தவர்கள். வனிதா தயாரித்த ஒரு படத்தை ராபர்ட் இயக்கியும் இருந்தார். அந்த படம் நஷ்டமடைந்தது. அதனால், பிரச்னை ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். இப்போது மீண்டும் இருவரும் இணைந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம், இப்போது இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிப்பதாகவும் அதற்கான விளம்பர யுக்திதான் இந்த திருமண தகவல் என்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
The post டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை 4 வது திருமணம் செய்கிறாரா வனிதா? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.