
சென்னை: எடப்பாடி பழனிசாமியின் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தின் 3ம் கட்டம் ஆகஸ்ட் 11ல் கிருஷ்ணகிரியில் தொடங்குகிறது என அதிமுக அறிவித்துள்ளது. ஆக.11ல் தொடங்கி 23ம் தேதி வரை 8 மாவட்டங்களில் இபிஎஸ் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஆகஸ்ட் 23ம் தேதி திருப்போரூர் தொகுதியில் தனது 3வது கட்ட சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி நிறைவு செய்கிறார். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி 3ஆம் கட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
The post ஆகஸ்ட் 11 முதல் இபிஎஸ் 3ம் கட்ட சுற்றுப்பயணம் appeared first on Dinakaran.
