- OPS
- Srivilliputur
- முன்னாள்
- முதல் அமைச்சர்
- அத்திமுக்
- ஓ பன்னீர் செல்வம்
- ஆதிமுக தன்னார்வ உரிமைகள் மீட்பு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. அதிமுக மற்றும் பாஜ தலைமை ஓபிஎஸ்சை கண்டுகொள்ளாத நிலையில் அவர் விரக்தியான மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் அரசியலில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மற்றும் குலதெய்வம் கோயிலில் வழிபடுவது வழக்கம்.
இதன்படி ஓ.பன்னீர்செல்வம் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு இன்று காலை வந்தார். அவருடன் ஆதரவாளர்களும் வந்தனர். கோயிலில் தரிசனம் செய்த ஓ.பன்னீர்செல்வம், அதன்பின் ஆண்டாள் பிறந்த நந்தவனம், பெரியபெருமாள் சன்னதிக்கும் சென்று வழிபாடு செய்தார். இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தனது குலதெய்வம் கோயிலான செண்பகத்தோப்பு வனப்பேச்சியம்மன் கோயிலுக்கும் சென்றார். அங்கும் தரிசனம் செய்தார்.
