- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- சென்னை
- அரசுத்தலைவர்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- Mutharasan
- தூத்துக்குடி, கவின்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி இளைஞர் கவின் சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்திருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. இப்படுகொலையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிப்பதோடு, சாதி – ஆணவ படுகொலையில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்தி கடும் தண்டனை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறது. இதுபோன்ற படுகொலைகள் சமூக நல்லிணக்கத்தை சிதைக்கிறது. சாதிய ஆணவ படுகொலைகள் தொடராமலிருக்க தனிச் சட்டம் இயற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்.
The post இந்திய கம்யூ. வலியுறுத்தல் ஆணவ படுகொலை தொடராமலிருக்க தனி சட்டம் appeared first on Dinakaran.
