பட்டினியால் வாடும் காசா மக்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் உதவிக்கரம் நீட்டியுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரால் காசாவில் வசிக்கும் பாலஸ்தீன மக்கள் ஒருவேளை உணவின்றி துயரில் வாழும் காட்சிகள் உலகையே உலுக்கி உள்ளன. உணவு பொருள் விநியோகத்தை இஸ்ரேல் தடுப்பதாகவும், உலக நாடுகள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், ஐக்கிய அமீரகம் சார்பில் பாலஸ்தீன மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. மத்திய காசா பகுதியில் சரக்கு விமானத்தில் இருந்து பாராசூட் உதவியுடன் உணவு பொருட்கள் அடங்கிய பொட்டலங்கள் வீசப்பட்டன. இருப்பினும் தங்களுக்கு இந்த உணவு பொருட்கள் போதாது என தெரிவித்துள்ள பாலஸ்தீன மக்கள் கூடுதல் உணவுகளை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். முன்னதாக ஜோடார் நாடும் இதே போன்று உணவு பொருட்களை வழங்கி இருந்தது.
The post போரை விட நிச்சயம் கொடியது பசிப்பிணி: பட்டினியால் வாடும் காசா மக்களுக்கு விமானத்தின் மூலம் உணவுப் பொருட்கள் விநியோகம்! appeared first on Dinakaran.
