எஞ்சின் பழுது-விமானம் அவசரமாக தரையிறக்கம்

வாஷிங்டனில் புறப்பட்ட சிறிதுநேரத்திலேயே போயிங் டிரீம்லைனர் விமானத்தில் எஞ்சின் கோளாறு ஏற்பட்டுள்ளது. வாஷிங்டனில் இருந்து ஜெர்மனிக்கு புறப்பட்ட விமானத்தில் திடீரென்று எஞ்சின் கோளாறு ஏற்பட்டது. இடதுபக்க எஞ்சின் பழுதானதை அடுத்து விமானிகள் MAYDAY எனக் கூறி அவசர உதவி கோரினர். விமானம் 5000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது இடதுபக்கத்தில் உள்ள எஞ்சின் பழுதானது. எஞ்சின் பழுதானதை அடுத்து எரிபொருள் தீர, விமானம் வானில் சிறிது நேரம் வட்டமடித்தது. எரிபொருள் தேவையான அளவுக்கு தீர்ந்த பிறகு விமானம் மீண்டும் வாஷிங்டனிலேயே தரையிறங்கியது.

The post எஞ்சின் பழுது-விமானம் அவசரமாக தரையிறக்கம் appeared first on Dinakaran.

Related Stories: