இந்த போட்டிகளில் பெண்கள், ஆண்களுக்கு இரு நபர் கொண்ட ஆறு படகுகளில் போட்டியாளர்கள் பங்கேற்றனர். பெண்கள் போட்டியில் சென்னையை சேர்ந்த சந்தியா, லெட்சுமி குழுவினர் முதலிடத்தையும், குற்றாலம் ஐந்தருவி பகுதியைச் சேர்ந்த இசக்கியம்மாள், அகல்யா குழுவினர் இரண்டாமிடத்தையும், மேலமெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்த புனிதா, கீர்த்திகா குழுவினர் 3வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.
தொடர்ந்து ஆண்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் குற்றாலத்தைச் சேர்ந்த வசந்த், கணேசன் குழுவினர் முதலிடத்தையும், காடை என்ற அருண்ராஜ், பிரசாத் குழுவினர் இரண்டாமிடத்தையும், மதுரையைச் சேர்ந்த கண்ணன், கரிலிக்காஷ் குழுவினர் மூன்றாமிடத்தையும் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பழனி நாடார் எம்எல்ஏ பரிசுகளை வழங்கி பாராட்டினார். வட்டார காங்கிரஸ் தலைவர் குற்றாலம் பெருமாள், நகரத் தலைவர் துரை மற்றும் படகு குழாம் பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
The post குற்றாலம் சாரல் திருவிழாவில் ஆண்கள், பெண்கள் உற்சாகமாக பங்கேற்ற படகு போட்டி appeared first on Dinakaran.
