×

ஆம்பூர் அருகே ரூ.10,000 கடனுக்காக கொத்தடிமைகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 7 பேர் மீட்பு!!

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே ரூ.10,000 கடனுக்காக கொத்தடிமைகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாய்க்கனேரி ஊராட்சிக்கு உட்பட்ட காமனூர்தட்டு மலை கிராமத்தில் ராஜா என்பவருக்கு சொந்தமான நிலத்தை மகாவிஷ்ணு என்பவர் குத்தகை எடுத்துள்ளார்.

இவரிடம் ரூ.10,000 கடன் பெற்று வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இருளர் குடும்பத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண், 2 குழந்தைகள் உட்பட 7 பேரை தனது நிலத்தில் பணி செய்வதற்காகவும், கால்நடைகளை பராமரிப்பதற்காகவும் மகாவிஷ்ணு கொத்தடிமைகளாக பிடித்து வைத்திருந்தார். இந்த தகவலறிந்த வாணியம்பாடி கோட்டாட்சி அலுவலர் அஜிதா பேகம், காமனூர்தட்டு மலை கிராமத்திற்கு நேரில் சென்று மகாவிஷ்ணு கொத்தடிமைகளாக இருந்த கர்ப்பிணி, 2 குழந்தைகள் உட்பட 7 பேரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆம்பூர் அருகே ரூ.10,000 கடனுக்காக கொத்தடிமைகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 7 பேர் மீட்பு!! appeared first on Dinakaran.

Tags : Ambur ,Tirupattur ,Mahavishnu ,Kamanurthattu Malai ,Naikkaneri panchayat ,
× RELATED ஒரே முகச்சாயல் என பதிவேற்றம் செய்ய...