×

சாத்தனூர் அணையில் இருந்து நந்தன் கால்வாய் தொடங்கும் இடத்தை தலைமை பொறியாளர் ஆய்வு

*பராமரிப்புகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்

தண்டராம்பட்டு : சாத்தனூர் அணையில் இருந்து நந்தன் கால்வாய் தொடங்கும் இடத்தை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார். அப்போது பராமரிப்புகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணை தமிழகத்தின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகும். 119 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 7,321 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும்.

சாத்தனூர் அணையின் இடது மற்றும் வலதுபுற கால்வாய் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.மேலும் திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் பல்வேறு கிராமங்களுக்கும் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை கொண்டு அணையில் மின்சாரம் உற்பத்தி செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சாத்தனூர் அணையில் இருந்து ரூ.304 கோடியில் நந்தன் கால்வாய் திட்டம் துவங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன் அடிப்படையில் நேற்று சாத்தனூர் அணையில் இருந்து நந்தன் கால்வாய் துவங்கப்படும் இடத்தை சென்னை மண்டலம் தலைமை பொறியாளர் பொதுப்பணி திலகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்அப்போது சாத்தனூர் அணையில் நடைபெற்று வரும் பணிகள் சாத்தனூர் அணையில் உள்ள மதகுப்பகுதி ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் சாத்தனூர் அணையில் எவ்வளவு தண்ணீர் தற்போது உள்ளது, அணை பராமரிப்பு குறித்து கேட்டறிந்தார்.

சாத்தனூர் அணையில் தற்போது 117.20அடி நீர்மட்டம் உள்ளது. பூங்கா பராமரிப்புக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்தால் இன்னும் பூங்கா பராமரிப்புக்கு ஏற்றதாக இருக்கும் என அதிகாரிகள் கூறினர். ஆய்வின்போது கண்காணிப்பு பொறியாளர் தமிழ்ச்செல்வன், மத்திய பெண்ணையாறு வடிநில வட்டம் அறிவழகன், செயற்பொறியாளர் ராஜாராமன், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள் சந்தோஷ், ராஜேஷ், ஸ்ரீ செல்வபிரியன் உடன் இருந்தனர்.

Tags : Chief Engineer ,Nandan Canal ,Sathanur Dam ,Thandarampattu ,Tiruvannamalai district ,Tamil Nadu… ,
× RELATED தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே...