- தமிழ்
- தமிழ்நாடு
- Orani
- அதியாடிதட்
- உடன்குடி
- அமைச்சர்
- அனிதா ராதாகிருஷ்ணன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திமுக
- முதல் அமைச்சர்
- ஸ்டாலின்
- ஓரணி…
உடன்குடி, ஜூலை 22: உடன்குடி அருகே அத்தியடிதட்டில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம் தீவிரமாக நடந்து வருகிறது. மக்களுடன் ஸ்டாலின் செயலியில் இணைக்க தெற்கு மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு மீனவளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உடன்குடி அருகேயுள்ள அத்தியடிதட்டு கிராமத்திற்கு சென்று முத்தாரம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து வீடுவீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கும் பணியைத் துவக்கிவைத்Aதார்.
நிகழ்ச்சிகளில் வர்த்தக அணி மாநில இணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட பொருளாளர் ராமநாதன், ஒன்றியச் செயலாளர்கள் உடன்குடி கிழக்கு இளங்கோ, மேற்கு பாலசிங், உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவரும், நகரச் செயலாளருமான சந்தையடியூர் மால்ராஜேஷ், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ராமஜெயம், பூத் நிர்வாகி சுரேஷ்குமார், ஒன்றிய பொருளாளர் பாலகணேசன், மவட்ட பிரதிநிதிகள் மதன்ராஜ், ஜெயபிரகாஷ், ராஜாபிரபு, ஹீபர் மோசஸ், பேரூராட்சி கவுன்சிலர்கள் அஸ்ஸாப், ஜான்பாஸ்கர், இளைஞர் அணி ஒன்றியச் செயலாளர்கள் கிழக்கு மனோஜ், மேற்கு பாய்ஸ், ஆட்டோ கணேசன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
The post அத்தியடிதட்டில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை appeared first on Dinakaran.
