×

பெண் குழந்தையை பெற்றெடுத்த சிறுமி போக்சோவில் வாலிபர் கைது

வேலூர், ஜூலை 22: வேலூர் அரசு மருத்துவமனையில் சிறுமி பெண் குழந்தையை பெற்றெடுத்த சம்பவத்தில் தொடர்புடைய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். வேலூர் அருகே ஒரு பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி‌. இவர் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த பைரோஸ்(22) என்பவருக்கும் இடையே கடந்த ஆண்டு பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனிடையே பைரோஸ், சிறுமியிடம் திருமண ஆசை காட்டி அடிக்கடி தனிமையில் இருந்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானார்.

தொடர்ந்து அவர் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் திடீரென கடந்த 19ம் தேதி வீட்டிலிருந்த சிறுமிக்கு வயிறு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து டாக்டர்களுக்கு மாணவி சிறுமி என தெரியவந்தது. இதுபற்றி சிறுமியிடம் விசாரித்த போது, தான் பைரோஸ் என்பவரால் பாதிக்கப்பட்டதை கண்ணீருடன் கூறினார்.

The post பெண் குழந்தையை பெற்றெடுத்த சிறுமி போக்சோவில் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Vellore ,Vellore government ,Dinakaran ,
× RELATED 22 மோட்டார் விபத்து வழக்குகளுக்கு ரூ.3.6...